2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

குளிரும் அறையும்... உலரும் கண்களும்...

Piriyadharshini   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு  வழக்கமான ஓர் விடயமாகிவிட்டது.

வெப்பமான பருவநிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஏயார்ர் கண்டிஷன் (குளிர்ப்பதன வசதி) செய்யப்பட்ட அறையில் சராசரியாக, ஒரு நாளுக்கு 16 மணிநேரங்களைவிட அதிகமாகக்கூட பலர் செலவிடுகின்றனர்.

குளிரூட்டப்பட்ட அறையில் மணிக்கணக்கில் இருக்கும்போது நமது கண்களில் பிரச்சினைகள் ஏற்படுவதை நாம் அவதானிக்கலாம். கண்கள் உலர்ந்து போவதையும், எரிச்சல் இருப்பதையும், அரிப்பதனால் தேய்க்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதையும், கண்களில் இருந்து நீர் வடிவதையும் நாம் பல நேரங்களில் உணரக்கூடும்.



உலர் கண் என்பதே இதற்கு பின்னால் இருக்கும் பொதுவான காரணமாகும். இதற்கு, உலர் கண் நோய்க்குறி (Dry eye syndrome) என்கிறார்கள் கண் சிகிச்சை மருத்துவர்கள். குளிர்சாதனங்களை நாம் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நிலைமையில், உலர் கண் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமாகும். 

​அறிகுறிகள்

* கண்களில் எரிச்சல் உணர்வு

* அரிக்கும் கண்கள், வலிக்கும் உணர்வுகள்

* கனமான கண்கள், புண்ணான கண்கள்

* உலர்வான உணர்வு மற்றும் மங்கலான பார்வை 

தடுப்பு முறைகள்

* ஏயார் கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளை மற்றும் காற்றோட்ட வசதியில்லாத அறைகளை பயன்படுத்துவதைத் முடியுமான வரையில் தவிர்க்க முயற்சியுங்கள்.

* ஏயார்-கண்டிஷனரிலிருந்து வெளிவரும் காற்று உங்கள் மீது நேரடியாக படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் கண்களுக்குள் காற்று வலுவாக ஊடுருவிச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

* புகையில் இருந்தும், புகைப்பிடிப்பவர்களிடமிருந்தும் தூரமாக இருத்தல்.

* ஒவ்வொரு நாளும் போதுமான அளவு திரவ வகை உணவுகளைப் பருகுதல்.

* உணவில் உப்பு சேர்ப்பதைக் கட்டுப்படுத்தவும்.

* தினமும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியமாகும்.

* சூரிய ஒளி காப்புக் கண்ணாடிகள் (சன்கிளாஸ்) அல்லது பாதுகாக்கக் கூடிய கண் அணிகலன்களை அணிய முயற்சியுங்கள்.

* உங்கள் உடல் அதிக அளவிலான கண்ணீரை உருவாக்குவதற்கும் சுரப்பதற்கும் கண் எரிச்சலையும் அழற்சியையும் குறைப்பதற்கும் உதவும். என்பதால், அலுவலகத்திற்கு உள்ளேயான நடைமுறைகள் குறித்தும் கண் மருந்துகள் குறித்தும் ஒரு கண் மருத்துவர் வழங்கும் மருந்துகளை பயன் படுத்துவதுடன், மருத்துவரின் பரிந்துரைகளை பின்பற்றுங்கள்.

* கண் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உராய்வு நீக்கும் திரவங்களைப் பயன்படுத்துங்கள். உலர் கண்ணுக்கு எதிராக முன்னெச்சரிக்கை முறைகள் எடுக்கப்படவில்லை எனில், கண் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட நேரிடும் ஆகையால் முன்னெச்சரிக்கையாக சிசிச்சைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .