2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

1,000 ரூபாய் இயக்கம் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 16 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

சம்பள விவகாரத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, 1,000 ரூபாய் இயக்கம், அதனுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து, ஹட்டனில், நாளை (17), எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்​னெடுக்கவுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நாளை பிற்பகல் 1 மணியளவில், ஹட்டன், மல்லியப்பு சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு, பின்ன், ஹட்டன் நகரின் மத்திய பஸ்தரிப்பிடத்துக்குச் சென்றடையவுள்ளது.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் மீது அக்கறையுள்ள அனைவரும், இந்த பேரணியிலும் போராட்டத்திலும் கலந்துகொள்ளவேண்டும் என, ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, ​இன்று (16), ஹட்டன் சமூக நல நிறுவனத்தில்  இடம்பெற்றது.

1,000 ரூபாய் இயக்கத்தில் இணைந்து செயற்படும் மலையக  மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் எஸ்.கணேசலிங்கம் தலைமையில்  இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், 1,000 ரூபாய் இயக்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை,  எதிர்வரும் 24ஆம் திகதியும் பொகவந்தலாவை நகரில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .