2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

1,000 ரூபாய் கோரி போராட்டம்

Gavitha   / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு, அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள், எந்தவொரு காரணம் கொண்டும் 1,000 ரூபாயை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த, 1,000 ரூபாய்க்கான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், நுவரெலியாவின் தபால் அலுவலகத்துக்கு முன்னால், இன்று (10) நடைபெற்றது.

இதைத் தலைமைத்தாங்கி கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தோட்டக்கம்பனிகளில், மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை சம்பள அதிகரிப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவம் எனினும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை மாத்திரம், வழங்குவதற்கு மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

போராட்டம் செய்து சம்பள அதிகரிப்பைக் கோருவது என்பது, ஒரு துர்பாக்கிய நிலை என்றும் ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ததன் காரணமாகவே, இன்று அரசாங்கம் அந்நிய செலாவணியை ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முறையும் கம்பனிகளால் 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்க முடியாவிடின், கம்பனிகள் தங்கள் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்றும்  அதேபோல், கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் தொழிற்சங்கங்கள், தங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கிவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .