2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1 இலட்சம் கிலோகிராம் பொலித்தீன் கழிவுகள்

செ.தி.பெருமாள்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், இன்று வரையான காலப்பகுதிக்குள், மலையின் உச்சியிலிருந்து அடிவாசரம் வரை, 1 இலட்சத்து 10 ஆயிரம் கிலோகிராம் பொலித்தீன் கழிவுகள் பெறப்பட்டுள்ளது என, மஸ்கெலியா, ரத்னபுர, குருவிட்ட ஆகிய பிரதேச சபையின் தவிசாளர்கள் தெரிவித்தனர்.

இந்த முன்று பிரதேச சபைகளால் முன்னெடுக்கப்பட்ட கழிவகற்றல் செயற்பாடு தொடர்பாக, இன்று (13) கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், ஹட்டன் நல்லதண்ணி வழியில் செல்லும் ஊசி மலைவரையுள்ள பகுதியில், வாரமொன்றுக்கு, 1,500 கிலோகிராம் தொடக்கம் 6,000 கிலோகிராம் வரையான பொலித்தீன், பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுவதாகவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கியத்தெல கங்குல ஆறு மாசடையும் வகையில், மவுசாகல நீர் தேக்கத்தில் பாரிய அளவில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் அதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும்  தெரிவித்த குருவிட்ட பிரதேச சபையின் பொறுப்பதிகாரி பிரதீப் குமார சிங்க, இதைத் தடுக்க, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .