2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’10 வருடங்கள் செலுத்தப்படாமல் இருந்த EPF, ETFஐ செலுத்துமாறு உத்தரவு’

ஆ.ரமேஸ்   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில், அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்பனி முகாமைத்துவத்துக்குக் கீழ் இயங்கிவரும் தோட்டங்களில் பணியாற்றும் சுமார் 10 பேருக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை, தொழிலாளர்களுக்கு செலுத்தவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவர் பி.பி சிவபிரகாசம் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்த மில்லியன் கணக்கிலான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவை, தொழிலாளர்களுக்குச் செலுத்தப்படல் வேண்டும் என்று, இலங்கை மனித உரிமை மீறல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக அவர் ​தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்தப் பணம் உரியவர்களுக்குச் செலுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக, தொழிலாளர்களும்  சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும், கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர் என்றும் கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் தோட்டங்களில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்கால பணம், அரசாங்கப் பொறுப்பிலுள்ள 31 தோட்டங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளமையை, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைபாடுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தக் கட்டணங்கள், 2001ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை என்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட இந்தத் தொகைகள், உரிய நிதியங்களுக்கு, தோட்ட நிர்வாகங்களால் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மனித அபிவிருத்தி ஸ்தாபனம், தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் செய்த முறைப்பாட்டுக்கமையவே, இலங்கை மனித உரிமை மீறல் ஆணைக்குழுவால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .