2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

200 வருட பழமையான நாகலிங்கம் கண்டெடுப்பு

பா.திருஞானம்   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சிவலிங்கம் சிலையொன்று (நாகலிங்கம்), புஸ்ஸலாவ - டெல்டா தோட்டம் கிழக்குப் பிரிவில், கடந்த வௌ்ளிக்கிழமை (15) இரவு 8 மணிக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், ஆற்றங்கரையில் காணப்படும் இராமர் ஆலயத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.   

இதனைப் பார்வையிட்டு, வழிபாடு செல்வதற்காக நாளாந்தம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  

மார்கழி மாதம் திருவெம்பாவையொட்டி, மார்கழி ஒன்று முதல் தை ஒன்று வரை இராமர் பஜனை பாடுவது பெருந்தோட்ட மக்களிடத்தில் வழக்கமாக உள்ளது.   

மார்கழி முதலாம் நாள் கம்பம் பாலித்தல் நடைபெறும். கம்பம் பாலித்தல் என்பது தொடர்ந்து 30 நாட்கள் பஜனைக் குழுவினர் வீடு வீடாகச் செல்லும் போது தூக்கிச் செல்லப்படும் திரிசூலம் வடிவிலான கம்பத்தைத் தூக்கிச் செல்பவரை நியமிப்பதாகும்.  

கம்பத்தைத் தூக்குபவர் யாரென்பதைத் தெரிவுசெய்வதற்கு, திருவூலச்சீட்டு போடப்படும். அந்தச் சீட்டை எடுப்பவரே, அந்தக் கம்பத்தைத் தூக்கிச்செல்வார்.   

அந்த நிகழ்வு, டெல்டா தோட்டம் கிழக்கு பிரிவின் பஜனை ஆசிரியர் அ.பெரியசாமி தலைமையில், பிரதேச இராமர் ஆலயத்தில், கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெற்றது.  

இதன்போது அருளாடிய எஸ்.ரசிண்டன், இரவு வேளையில் தான் ஓர் அதிசயத்தைக் காட்டவுள்ளதாகக் கூறி ஆலயத்தின் அருகிலிருக்கும் பாரிய பாலத்துக்கு கீழ் சென்று குறித்த சிவநாகலிங்கத்தை மீட்டெடுத்து வந்துள்ளார்.   

இந்தச் சிலை, 05 தலை நாகபாம்பு சிவனுக்குக் குடைபிடிக்கும் தோற்றத்தில் காணப்படுகின்றது. சிலை காணப்பட்ட இடத்தில் நாக பாம்பு ஒன்றும் தற்போது குடி கொண்டுள்ளது.   

பாம்பு இருக்கும் குகைக்குல் மாணிக்கக் கற்கள் இருப்பது போன்ற வெளிச்சம் காணப்படுகின்றது. நாகலிங்கம் சிலையைப் பார்வையிடுவதற்காகவும் வணங்குவதற்காகவும் பெருந்திரலான மக்கள், இப்பிரதேசத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.   

குறித்த பிரதேசத்தில் 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டங்களில் தொழில் செய்ய இந்தியாவிலிருந்து வந்தவர்களால் இந்த இடத்தில் சிவனை (நாகலிங்கம்) வைத்து வணங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.  

ஆரூடத்தினால் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிலை வைக்கப்பட்டிருந்த பீடம் ஒன்றும் காணப்படுகின்றது. இந்த சிவனாலயம் காணப்பட்ட இடத்தில் பாரிய பாலம் ஒன்று ஆங்கியேர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  

இந்தப் பாலம் ஆலயம் காணப்பட்ட கற்பாறையின் மேல் பகுதியுடன் தொடர்புபட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பாலம் அமைக்கப்பட்டதால் மக்களால் இந்த ஆலயம் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.  

இதேவேளை, ஆற்றில் காணப்படும் பெரும்பாலான கற்கள், சிவலிங்க வடிவிலேயே காணப்படுகின்றன. இந்த ஆற்றுப்பகுதியில் இவ்வாறு சிவலிங்கம் காணப்படுவதால் என்னவோ இந்த சிவலிங்கம் இங்கு வைத்து பெருந்தோட்ட மக்களால் வழிபட்டிருக்கலாம் எனவும் எண்ணத்தோன்றகின்றது.  

குறித்த நாக பாம்பு இருக்கும் பிரதேசத்திலேயே சிவனுக்கான ஆலயம் அமைத்து சமய ஆகம விதிப்படி சிவனை பிரதிஸ்டை செய்வதற்கான நடவடிக்கைகளை தோட்ட பொதுமக்கள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.   

அந்த ஆலயத்துக்கு உரிய நாகபாம்பு குறித்த இடத்தில் காணப்படுவதால், இந்த இடத்திலேயே ஆலயம் அமைப்பது நல்லது என்றும் அவ்வாறு அமைக்கும் சந்தர்ப்பத்தில் நாகத்துக்கு ஆலயத்திலேயே இருக்கக்கூடிய வாய்ப்பும், பக்தர்களுக்கு அதிக அருளை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என, சில சமயப் பெரியார்கள் கூறுகின்றனர்.   

பாம்பு ஓர் இடத்திலும் சிவன் வேறு ஓர் இடத்திலும் இருந்தால் நாக பாம்பு குழப்பமடையலாம் எனவும் கூறப்படுகின்றது.   

நாகலிங்கத்தைப் பார்வையிட்டு வழிபடுவதற்குச் செல்பவர்கள் அங்கிருக்கும் நாக பாம்புக்கு தொந்தரவு செய்யும் வகையில், நடந்துக்கொள்ளக் கூடாதென கேட்டுக்கொ ள்ளப்பட்டு உள்ளனர்.  

நாகலிங்கத்தைப் பார்வையிட்டு வழிபடுவதற்குச் செல்லும் பக்தர்கள், காணிக்கை செலுத்தி நெல் தூவி வணங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .