2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘3 வருடங்களாக திகா தூங்கினாரா?’

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ். எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்   

“எனக்கு ஒதுக்கப்பட்ட 800 மில்லியன் ரூபாய் நிதிக்கு, என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனது ஆதாரங்கள் சரியென ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு நிதி மோசடி குற்றப் பிரிவுக்குச் சென்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நான் தயாராக உள்ளேன். இந்த விவகாரம் பொய்யானது. தேர்தலில் காங்கிரஸின் வெற்றியைத் தடுக்கும் சூழ்ச்சியாகும்” என்று தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், “கடந்த மூன்று வருடங்களாக திகாம்பரம் என்ன செய்துகொண்டிருந்தார். தூங்கினாரா?” என்றும் கேட்டார்.   

மேலும், “எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும்” என்றும் அவர் தெரிவித்தார்.   

கொட்டகலை தொழில்நுட்ப நிலையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.   

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,   

“எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் இ.தொ.கா கைப்பற்றும் என்பதைத் தெரிந்துகொண்ட மாற்றுக்கட்சிகள், மூன்று வருடங்கள் கடந்த பின்பு பாரிய நிதிமோசடி குற்றப் பிரிவுக்குச் சென்று முறைபாடு செய்யப்போவதாகக் கூறுகின்றனர்.   

“நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் எந்தவித ஊழல்களும் செய்யவில்லை. அதனால் நான் அதற்குப் பயப்படவேண்டிய தேவையும் இல்லை.   

“இது ஓர் அரசியல் நாடகம். இ.தொ.கா, இம்முறை நிச்சயமாக வெற்றிபெறும் என்பதை அறிந்துகொண்ட இவர்கள், மக்களைத் திசைதிருப்புவதற்காக நிதிமோசடி குற்றப் பிரிவுக்குப் போவதாகக் கூறிவருகின்றனர்.  இதேவேளை, ஊவா மாகாண முதலமைச்சர், மகளிர் பாடசாலை ஒன்றின் அதிபரை முழங்காலிட வைத்தமை தொடர்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி ஏழுப்பியபோது, “இதுபோன்ற குற்றச்சாட்டை ஏற்றுகொள்ளமுடியாது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X