2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

40 ஆயிரம் கித்துள் கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

இரத்தினபுரி மாவட்டத்தில், 40ஆயிரம்  கித்துள் கன்றுகளை  நடுவதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கித்துள் செய்கையை நாடளாவிய ரீதியில்  ஊக்குவிக்கும் நோக்கில், இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில், 28 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இம்முயற்சியை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறப்பர், தேயிலை, மிளகு போன்ற வர்த்தகப் பயிர்களைப் போன்று, கித்துள் செய்கையையும் விஸ்தரித்து,  இதற்கான தனியான கித்துள் அபிவிருத்தி அதிகாரசபையொன்றை  அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இத்திட்டத்துக்கு அமைய,  கேகாலை மாவட்டத்தின் பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள யானைகளுக்கு, உணவுக்காக கித்துள் மரங்களை வெட்டுவதைத்தடுத்து, யானைகளுக்கான மாற்றுணவு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும், சப்ரகமுவ மாகாண சபை  அவதானம் செலுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .