2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

5 ஆசிரியர்கள் இடமாற்றம்: பொகவந்தலாவையில் அமைதியின்மை

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ் 

ஹட்டன் கல்விவலயத்துக்கு ட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் பணிபுரிந்து வந்த ஜந்து ஆசிரியர்களுக்கு, திடீனெ இடமாற்றம் வழங்கப்பட்டமையையடுத்து,

 பாடசாலை நிர்வாகத்துக்கும் பெற்றோருக்கும் இடையில், நேற்று (27) அமைதியின்மை ஏற்பட்டது.  

குறித்த பாடசாலையில், 2, 5 வருடங்கள் கடமையாயாற்றி வந்த ஆசிரியர்களுக்கே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  

இந்த இடமாற்றத்துக்கான காரணத்தைக் கூறுமாறு, பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் வினவச் சென்றபோதே, இரண்டு தரப்பினருக்கு இடையேயும் அமைதியின்மை ஏற்பட்டது.  

இடமாற்றம் பெற்றுள்ள ஐந்து ஆசிரியர்களும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்விச் சேவைகளை வழங்குவதாக தெரிவித்த பெற்றோர், பாடசாலை அதிபருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையை அடுத்து, பாடசாலையில் அதிக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர் என, ஹட்டன் வலயக் கல்விப் பணிமனைக்கு, அதிபரால் அறிவிக்கப்பட்டதையடுத்தே, இந்த இடமாற்றம் ​வழங்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டினர்.  

பாடசாலையில் ஆசிரியர்கள் அதிகமாக இருந்தால், 8 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களே இடமாற்றப்படல் வேண்டும் என்றும் ஆனால், இந்தப் பாடசாலையில், 10 வருடங்களுக்கு மேல் பணி புரியும் ஆசிரியர்கள் இருக்க, இந்த ஆசிரியர்கள் மாத்திரம் இடமாற்றப்பட்டமை ஏன் என, பெற்றோர் கேள்வியெழுப்பியுள்ளனர்.  

இந்தப் பிரச்சினையை அடுத்து, கோட்டகல்வி பணிப்பாளர் செந்துரவேல், சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்திருந்தார்.  

இது தொடர்பாக அவரிடம் வினவியபோது, ஆசிரியர்கள் எதற்காக இடமாற்றப்பட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே தான் வந்ததாகவும் இச்சம்பவம் தொடர்பில், ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.  

இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலயகல்வி பணிமனையில் பணிப்பாளர்   பி.ஸ்ரீதரனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும், அது பலனளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .