2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

50 ரூபாய் கொடுப்பனவுக்கு அமைச்சரவையில் அங்கிகாரம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, தேயிலைச் சபையினூடாக 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏப்ரல் மாதம் முதலான நிலுவைக்கட்டணம் முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விவரங்கள்,  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுடன் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்க தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளார் என்றும் அவர் கொழும்புக்கு வந்ததன் பின்னர், இவ்விடயம் தொடர்பில் அவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கலந்துரையாடலின் பின்னர்,  எடுக்கப்பட்டத் தீர்மானங்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .