2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

50 ரூபாய் விவகாரம்; உபகுழுவின் யோசனை அமைச்சரவையில் முன்வைப்பு

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்தச் சம்பளத்துடன் 50 ரூபாயை மேலதிகக் கொடுப்பனவாக இணைப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த யோசனை,  வெள்ளிக்கிழமை (19) முன்வைக்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

50 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளபோதும், அது இழுபறியில் உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி,  அரசாங்கத்துடன் முரண்பட்டிருந்த நிலையில், அண்மையில் இதுகுறித்து முடிவுகளை முன்வைப்பதற்காக 3 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில், அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தேயிலைச் சபையினூடாக 50 ரூபாயைப் பெற்றுக்கொடுப்பதாக ​உறுதியளித்திருந்தபோதிலும், தேயிலைச் சபையினூடாக இந்தத் தொகை வழங்கப்படுவதற்கு தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டு வருவதால், நவீன் இந்த விவகாரத்தில் பின்வாங்குவதாகவும்  அறியமுடிகிறது.

ஆகவே, வேறெந்த வழியிலாவது 50 ரூபாயைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதென்பதை ஆராயவே குறித்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரங்களில் முறைப்படி அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறாத நிலையில், அந்தக் குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை(19) குறித்த குழுவின் அறிக்கை முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X