2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஃபார்ம் ஷொப்புக்குத் தற்காலிகத் தடை

ஆ.ரமேஸ்   / 2019 ஜனவரி 19 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேசசபைக்குட்பட்ட நுவரெலியா பொரலந்த நகரம் தொடக்கம் கந்தப்பளை நகரம் வரையில் அமைந்துள்ள “ஃபார்ம் ஷொப்” (Farm Shop) வியாபாரிகளுக்கு, கோழி, ஆடு மற்றும் மாடு போன்ற இறைச்சி வகைகளை விற்பனை செய்வதற்குத் தற்காலிகத் தடை விதிப்பதாக, நுவரெலிய பிரதேச சபை அறிவித்துள்ளது.

நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம், நேற்று (18) கந்தப்பளையில் இடம்பெற்றது. சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்தக்  கூட்டத்தில், இந்தத் தடை அறிவிப்பு விடுக்கப்பட்டது.

கோழி, ஆடு, மாட்டிறைச்சி விற்பனைக்கு, அதிகூடிய விலை மனுவை, நுவரெலியா பிரதேசசபை கோரியிருந்தது. இந்த விலை மனுக்கோரலை பெற்றுக்கொண்டவர்கள், மாதாந்தம் பிரதேச சபைக்கு, அதிகளவான வரிச் செலுத்தவேண்டியுள்ளது.

இவர்களது விபாயரத்தில் நட்டம் ஏற்பட்டால், பிரதேச சபைக்குச் செலுத்தவேண்டிய வரியில் பிரச்சினை ஏற்படும் என்றும் இதைக் கவனத்தில் கொண்டே, மற்றைய ஃபார்ம் சொப் விபாயாரிகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .