2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அக்கரபத்தனை வியாபாரிகளுக்கு குரங்குத்தொல்லை

கு. புஷ்பராஜ்   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை - டயகம நகரத்தில் ஏற்பட்டுள்ள குரங்குத் தொல்லை காரணமாக, சுமார் 60க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களில், வியாபாரங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடைக​ளில், வியாபாரங்களுக்காக தொங்கவிடப்பட்டுள்ள வாழைப்பழங்கள் உள்ளிட்ட ஏனையப் பழங்களைக் குரங்குகள் வீணாக்குவதாகவும் அத்தோடு, வியாபார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் பொருள்களை, வீட்டுக்குக் கொண்டுச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குரங்குகள், வியாபார நிலையங்களின் கூரைமீது ஏறித் திரிவதாகவும் இதனால் கூரைகளும் பழு​தடைவதாகவும் இதனால், மழைக்காலங்களில் மழை நீர், கடைகளுக்கு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வீடுகளில் சிறு பிள்ளைகளை விட்டுச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் வீட்டிவுள்ள பொருள்களையும் குரங்குகள் சேதப்படுத்துவதாகவும் எனவே, நகரத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரிகள், இந்தக் குரங்குத் தொல்லையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்களும் வியாபாரிகளும் வேண்டு​கோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X