2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அஞ்சல் சேவை குறித்து தெளிவூட்டல் திட்டம்

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட தபால் நிலையங்களினூடாக மேற்கொள்ளப்படும் சேவைகள் குறித்து, பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று, ஹப்புத்தளை நகரில், நேற்று(21) முன்னெடுக்கப்பட்டது.  

இதன்போது, அஞ்சல் சேவை குறித்து விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள், ஹப்புத்தளை நகரில் விநியோகிக்கப்பட்டன.  

ஊவா மாகாணப் பிரதி அஞ்சல் நிலையப் பணிப்பாளர் தர்மசிறி பியசேன உள்ளிட்ட அதிகாரிகள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.   

ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட தபால் நிலையங்களினூடாக, மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணங்களைச் செலுத்துதல், மின்னஞ்சல், விரைவு அஞ்சல், தொலைநகல், பரீட்சைக் கட்டணங்கள் செலுத்துதல், தட்டச்சு செய்துகொள்ளல் போன்ற இன்னோரன்ன வகையில், அஞ்சல் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .