2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’அடிமை சாசனத்தை தக்கவைக்க 1,000 ரூபாய் ஆயுதமாகிவிட்டது’

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு ஒப்பந்தம் என்ற அடிமை சாசனத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு, மக்களிடம் சந்தா வசூலித்து சமூகமாற்றத்தைத் தடுத்து, அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகவே, 1,000 ரூபாயை ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில், இன்று (28) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், தங்களது ஆட்சியின் போதே, தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் 1,000க்கும் மேல் வருமானம் உழைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க கொள்கைகள் வகுக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், தொழிலாளர்களின் முன்னேற்றத்தை தடுத்து அவர்களை தொடர்ந்தும் மீளா வட்டத்துக்குள் வைத்துக்கொள்வதற்காகவே 1,000 ரூபாய், 1,000 ரூபாய் எனக் கூவித்திரிகின்றனர் என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X