2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அதிபரை மண்டியிடச் செய்தமைக்குக் கண்டனம்

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பெண் அதிபரை, ஊவா மாகாண முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வைத்தமை குறித்த விவகாரத்துக்கு மேற்படி வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்த அறிக்கையில்,“பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி, தமிழ் மாணவிகளின் கல்வி அடைவு மட்டத்தில், பின்னடைவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலொன்று, திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“இந்நிகழ்ச்சி நிரலுக்கு, உயர்கல்வி அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் துணைபோகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள், குறிப்பிட்ட பாடசாலையையும், பாடசாலைச் சமூகத்தையும் உள ரீதியாக அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.

“இவ்வாறான விடயங்களால், பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இக்களங்கத்தைப் போக்கும் வகையில், அனைவரும் செயற்படல் வேண்டும். அரசியல் இலாப நோக்கங்களை பாடசாலைகளில் பயன்படுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளல் வேண்டும்.

“கடந்த 3ஆந் திகதி, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் இவ்வாண்டுக்கான தரம் ஒன்று வகுப்புக்கு மாணவியொருவரை அனுமதிக்கும் விடயத்தில், அதிபர் மறப்புத் தெரிவித்ததையடுத்து, மன்னிப்புக் கேட்கும் விவகாரம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

“அரச பாடசாலை என்பது கல்வியமைச்சால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், மற்றும் தாபன விதிக் கோவைகளின் அடிப்படையில் செயற்படும் ஒரு நிறுவனமாகும்.

“இவற்றில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு புறம்பாகச் செயற்படுமாறு, அரசியல்வாதிகள் தமது அதிகாரப் பலத்தை பிரயோகித்து பலவந்தப்படுத்துவதையும் பாடசாலை நிருவாகத்தில் அநாவசியமாக தலையீடு செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

'எனினும், வித்தியாலய அதிபர்,'முதலமைச்சரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டமை குறித்து பேசப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை” என்று மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“முதலமைச்சர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க கூறவும் இல்லை. நான் மன்னிப்பு கேட்கவும் இல்லை. என்னை அவமானப்படுத்தும் வகையிலேயே, இவ்வகையிலான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்” என்று அதிபர் கூறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .