2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்களுக்கு ’நல்லாட்சி கசக்கிறது’

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்களுக்கு, அந்த ஆட்சி கசப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விமர்சித்துள்ளார்.

“சில அரசியல்வாதிகளுக்கு இப்போதுதான் நல்லாட்சியின் குறைகள் தெரிகிறது, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக்கொண்டு அதன் சுகபோகங்களைப் பெற்றுகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, அந்தக் கட்சியோடு ஒட்டிக்கொண்டிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவற்று தற்போதுதான் நல்லாட்சியின் குறைகள் தெரிகிறது” என்றும் அவர் சாடினார்.

தொடர்ந்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தின் போது, சிலர் மெளனிகளாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தனர் என்றும் அத்தகையவர்களுக்கு முதுகெலும்பு இருந்திருந்தால் தைரியம் இருந்திருந்தால், நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கபட்ட வரவு-செலவு திட்டத்துக்கு எதிராகக் கைகளை உயர்த்தி இருந்திருக்க வேண்டும் என்றும் சாடினார்.

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் ஆரம்பகைத்தொழில் பிரதி அமைச்சராக எங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அமர்ந்திருந்தார்.

மத்திய மாகாணத்தில், ராமேஸ்வரன் மாகாண அமைச்சராகவும் ஊவா மாகாணத்தில் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண அமைச்சராகவும் இருந்தது எங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில்தான், ஆனால் அவர்களுக்கு தற்போது நல்லாட்சி அரசாங்கம் கசக்கிறது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .