2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அம்பியூலன்ஸ் சாரதிகளது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’

மொஹொமட் ஆஸிக்   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோயாளரின் உயிரைக் கையில் வைத்துக்கொண்டு, பாரிய சேவையை வழங்குகின்ற அம்பியூலன்ஸ் சாரதிகளது கோரிக்கைகளை மாகாண மட்டத்தில் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு,  மத்திய மாகாண சபை தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மத்திய மாகாண சுகாதார அம்பியூலன்ஸ் சாரதிகளின் சங்கத்தின் 23ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், இந்நிகழ்வில் கலந்துகொண்ட அகில இலங்கை மாகாண அம்பியூலன்ஸ் சாரதிகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமரானந்த  வடுகே கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் மேற்கொண்ட தொழிற் சங்க நடவடிக்கைகள் காரணமாக அகில இலங்கை மட்டத்தில்  அம்பியூலன்ஸ் சாரதிகள் சேவை ஒன்றை ஸ்தாபிக்க  சுகாதார அமைச்சர் நடவடிக்கை  எடுத்துள்ளார். இது தொடர்பில் நாங்கள், அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.  இலங்கையின் அனைத்து மாகாண சபைகளிலும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்.

“கிழக்கு மாகாணத்தில், தமிழ் மற்றும் முஸ்லிம் அம்பியுலன்ஸ் சாரதிகள் 11 பேர், வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, இரு தினங்களில் தொழிற் சங்க நடவடிக்கை ஒன்றை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார்.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, நாளையும் (28) நாளை மறுதினமும்,  முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X