2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்’

செ.தி.பெருமாள்   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களுக்கான வேதனம், மக்களின் வரிப் பணத்திலேயே வழங்கப்படுவதாகவும் எனவே, அரச ஊழியர்கள், அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்ற முன்வர வேண்டுமென்றும் மத்திய மாகாண ஆளுநரும் ஜனாதிபயின் சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில், அரச சேவைக்கு 139 பேரை நிரந்தரமாக்கி அவர்களுக்கான உத்தியோகப் பூர்வ கடிதத்தை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

அரச அலுவலகங்களில் காலை 8.30 மணிக்கு, பணியாளர்கள் தங்களது வேலையை ஆரம்பிக்க வேண்டும் இருந்தபோதும் தற்போதுள்ளோர், தேனீர் அருந்தியப் பின்னர், பத்திரிக்கைகளில் செய்திகளை வாசித்து விட்டு, தங்களது சொந்த வேலைகளை முடித்து கொண்டு அதன் பின்னரே வேலையை ஆரம்பிப்பதாகவும் விமர்சித்தார்.

அதன் பின்னரும் அலைபேசியில் அதிகளவான நேரத்தை செலவிடுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒருசில அரச சேவையாளர்கள், தாங்கள் பணிப்புரியும் காரியாலயத்தில் இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே தங்களது கடமைகளை முறையாகச் செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

இவ்வாறு தங்களதுக் கடமைகளை முறையாகச் செய்யாமல், அலைபேசியிலும் பத்திரிக்கை வாசிப்பதிலும் நேரத்தை வீணடிப்பவர்கள் மீது விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய மாகாணத்தில் இயங்கும் அனைத்து அரச காரியாலயங்களிலும், காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரைக்கும் மக்களுக்கு சேவை புரிவது அரச ஊழியர்களின் தலையாய கடமையாகும் என்று வலியுறுத்திய அவர், 8 மணித்தியால வேலையை முறையாகச் செய்வதற்கு, அரச ஊழியர்கள் தயாராக வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .