2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரச சேவைகளைப் பெறுவதில் இழுபறி’

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு சிறந்த முறையில் இருந்தாலும், அரச சேவைகளைப் பெறுவதில் தேவையற்ற விதத்தில் இழுத்தடிக்கப்படுவதாக, பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், நிர்வாக சேவை என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, வேறு யாரையும் திருப்திப்படுத்துவதற்கு அல்ல என்றும் விமர்சித்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு அமைச்சு, பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மொழியில் கருமம் ஆற்றும் நிலைமை, தமிழ் மக்களுக்கு இல்லை என்றும் வடக்கு கிழக்கில் இந்நிலை எவ்வாறென்று தெரியாது என்றும் கூறிய அவர். ஆனால் நுவரெலியா உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில், தமிழ் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் குறிப்பட்டார்.

அரச காரியாலயங்களில் தமிழ்மொழி பணியாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகிறது என்றும் இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நாடுபூராவும் வழங்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் நியமனங்களிலும் தமிழர்கள் அதிகமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்த வரை, 250க்கும் அதிகமான கிராம சேவையாளர்கள் பிரிவுகள் காணப்படுகின்றன என்றும் நுவரெலியா மாவட்டத்துக்கு, 131 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், இதில் 8 தமிழர்களுக்கு மாத்திரமே கிராம சேவையாளர் நியமனங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

பதுளை மாவட்டத்திலும், தமிழ்க் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் எனவே இந்த நிலைமையை மாற்ற, அமைச்சு முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .