2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிவாரணப்பணிக்கு, அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என, நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் ரவி குழந்தை வேலு தெரிவித்தார்

நோர்வூட்  பிரதேசசபையின் மாதாந்த சபையமர்வு, டின்சின் கலாசார மண்டபத்தில், இன்று(6)  இடம்பெற்ற போதே, இவ்வாறு தெரிவித்தர் 

'கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் கட்டம் கட்டமாக மாகாண மட்டத்தில் ஊரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகம்,  சமுர்த்தி வங்கிகளினூடாக நாட்கூலிகளின் விவரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கான நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

'நோர்வூட்  பிரதேச சபைக்குட்பட்ட 12 வட்டாரங்ஙளிலுள்ள கிராமசேவகர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் அந்தந்த வட்டார உறுப்பினர்களும் எவ்வித கட்சி தொழிற்சங்க பாகுபாடும் இன்றி, தகவல் திரட்டுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட சகல பகுதிளிலும், பிரதேச சபையினூடாக  கிருமி நாசினி தெளிக்கப்பப்பட்டுள்ளதாகவும் ஒத்துழைப்பு வழங்கிய சகல உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .