2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘அரசாங்கத்துக்கு வழங்கப்படும் ஆதரவை பரிசீலிப்போம்’

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு, 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத் தராவிட்டால், அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் ஆதரவை பரிசீலனை செய்ய வேண்டி வரும் என மலைநாட்டு புதிய கி​ராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் இன்று  (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் திகாம்பரம்,

சட்ட சிக்கல் உள்ளதால், கூட்டு ஒப்பந்த விடயத்தில் தம்மால் தலையிட முடியாது. இதற்கு எம்மை அழைப்பதும் இல்லை தான் கலந்து கொள்வதும் இல்லை.அதனால் தான் போரராட்டங்களில் குதிக்கின்றோம். சம்பள பிரச்சினையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து விலகினால் தன்னால் இந்த கூட்டு ஒப்பந்த விடயத்தில் தலையிட முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .