2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆசனம் ஒதுக்குவதில் குளறுபடி; 8 உறுப்பினர்கள் வெளிநடப்பு

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசனங்களை ஒதுக்குவதற்கான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, மொனராகலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலிருந்து, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் வெளிநடப்புச் செய்த சம்பவமொன்று, மொனராகலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (25) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஆசன ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில், இதனை ஆட்சேபித்து, மொனராகலை மாவட்டத்தின் 6 பிரதேச சபைகளின் தவிசாளர்களும் இரு பிரதேச சபைகளின் உப தவிசாளர்களும், கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

மொனராகலை, பிபிலை, மடுல்ல, புத்தல, வெல்லவாய, படல்கும்புர ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களும் மெதகம மற்றும் சியம்பலாண்டுவ பிரதேச சபைகளின் உப தவிசாளர்களுமே, இவ்வாறு வெளிநடப்புச் செய்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மொனராகலை பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.எம்.ரத்னவீர, சாதாரண பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கான ஆசனங்கள், மேடையில் ஒதுக்கப்படுகின்ற போதிலும், இம்முறை, மேடைக்கு கீழேயே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

அத்துடன், தவிசாளர் பதவியை அவமானப்படுத்த இடமளிக்க முடியாதென்றுச் சாடிய மொனராகலை பிரதேச சபையின் தவிசாளர், மேடையில் ஆசனம் ஒதுக்குவதற்கு இடம் இருந்த போதிலும், தமக்கான ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத்  தெரிவித்தே, இவ்வாறு வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X