2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆயிரம் ரூபாய் விவகாரம்: விமர்சிப்பவர்களுக்குக் கண்டம்

ஆ.ரமேஸ்   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத்  தொழிலாளர்களுக்கு, மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கு விமர்சனங்களை முன்வைத்து, அரசியல் இலாபம் தேடுவோர்களுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிப்பதாக, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச சபையின் கந்தப்பளை உப காரியாலயத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பேசுபொருளாகி இருந்த சம்பளப் பிரச்சினைக்கு, புதிய ஜனாதிபதியின் அரசாங்க தீர்வொன்றைத் தந்துள்ளது என்றும் எனினும் இது தொடர்பாக, வங்கோரத்து அரசியலை நடத்திவரும் சிலர், விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், எதிர்பார்த்த அளவு மலையத்தில் இருந்து வாக்குகள் கிடைத்திருக்கவில்லை என்றாலும், வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், தொழிலாளர்களின் தொழிற்றுறை உரிமையைப் பாதுகாக்கும் கூட்டு ஒப்பந்தம், அரசாங்கம் முன்வந்து வழங்கும் 1,000 ரூபாய் சம்பளம் ஆகியவற்றை, தேவையற்ற வகையில் விமர்சனம் செய்வதைவிடுத்து, இ.தொ.காவுடன் கைகோர்த்து, தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X