2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆற்றை அகலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் கீழ், அவரின் பன்முகப்படுத்தபட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட தோன்பீல்ட் தோட்டத்தின் ஆற்றை அகலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம், நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டது.

மழைக்காலங்களின் போது தோன்பீல்ட் தோட்ட பகுதியிலுள்ள இந்த ஆறு பெருக்கெடுப்பதனால், வீடுகளும்,விவசாய நிலங்களும் பாதிப்படைக்கின்றன. இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் ஆகியோரின் கவனத்துக் கொண்டுச்செல்லபட்ட நிலையில், ஆறு அகலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த சம்பவங்கள் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையில், நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்ட அத்தியட்சகரோடு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நேரடியாக அவதானித்தோடு அனர்த்தங்கள் தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .