2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இ.தொ.காவிடம் வழங்கிய 40 பஸ்கள் மாயம்?

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ், எஸ்.கணேசன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 40 பஸ்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, கண்டியிலுள்ள இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங்கிடம், மகஜரொன்று நேற்று முன்தினம் (16) கையளிக்கப்பட்டுள்ளது.

என்பீல்ட் தோட்டம், ரூபாக்கொலை பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்திய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம் (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் அமைச்சர் ப.திகாம்பரம் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங்கிடம், ​அங்கிருந்த பொதுமக்கள் சார்பில் ஒருவர், மகஜரைக் கையளித்துள்ளார்.

இந்தியாவின் முன்னைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2008ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, இந்திய அரசாங்கத்தால் 40 பஸ்கள் வழங்கப்பட்டன. இவை, இந்திய ரூபாயில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியானவையாகும்.

இந்த பஸ்கள் யாவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டன..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்தும் வகையில் இந்த பஸ்கள் கையளிக்கப்பட்டிருந்த போதிலும், அவை, அம்மக்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பெருந்தோட்டப் பகுதிகளில் பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த 40 பஸ்கள் திடீரென மாயமாகியுள்ளனவெனவும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, பொதுப்போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த குறித்த பஸ்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதைக் கண்டறியக் கோரியுமே, குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .