2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இ.தொ.காவின் தேர்தல் பிரசாரம்; 26 ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில், நுவரெலியா, பதுளை, கண்டி மாவட்டங்களில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தனது தேர்தல் பிரச்சாரத்தை, இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க உள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நாளை மறுதினம் (24), காங்கிரஸ் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் மறைந்து 30ஆவது நாள் அனுஸ்டிக்கப்படவுள்ளது என்றும் இதனைத் தொடர்ந்து வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அதன் தேர்தல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுமென்றார்.

“காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி; தேசிய தொழிற்சங்கம். அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு தேசிய தலைவர் என்றபடியால், நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் முடக்கி இருக்காது, வெளியிலும் தமது பலத்தைக் காங்கிரஸ் காண்பிக்கும். அதற்காகவே இம்முறை, பதுளை, கண்டி நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நாம், தேர்தலில் களம் இறங்கியுள்ளோம். அந்தவகையில் எதிர்வரும் ஐந்து வருடங்களில், கண்டியில் ஒரு மாற்றத்தைத் தருவேன்” என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், ஐயா, சேர் என்று அழைப்பதெல்லாம் தனது தந்தையுடன் போய்விட்டது என்றும் கூறிய அவர், தன்னை மக்கள் ஜீவன் என்றே அழைக்குமாறு உருக்கமாகவும் அன்பாகவும் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X