2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இடமாற்ற விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதில் குளறுபடி

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேwஷ் கீர்த்திரத்ன

மத்திய மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு, இடமாற்றத்துக்கான விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.  

மத்திய மாகாணத்தின் 15 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 1,507 பாடசாலைகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேவையாற்றி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மேற்படி ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றங்களை எதிர்பார்த்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.   இந்த ஆசிரியர் இடமாற்றத்துக்காக, ஜூன் மாதமே விண்ணப்பிக்க வேண்டுமென்ற போதிலும், விண்ணப்பங்களை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.  

வருடாந்த ஆசிரியர் இடமாற்றச் சுற்றுநிரூபத்துக்கு அமைவாக, இடமாற்ற விண்ணப்பங்களை, ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிக்குள் அனுப்ப வேண்டுமென்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை, பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.   

இது தொடர்பில், மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .