2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இணையத்தள கல்விகளை முன்னெடுக்க முடியவில்லை

சுஜிதா   / 2020 மே 25 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 நெருக்கடி காரணமாக, பாடசாலை நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு இணையத்தளம் மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், டெப், ஸ்டார்ட் அலைபேசிகள், மடிக்கணினிகள் ஆகிவற்றைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும், கொவிட்-19 நெருக்கடிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், பழைய விலையை விட, அதிக விலையில் இவற்றை விற்பனை செய்வதால், இவற்றைக் கொள்வனவு செய்துகொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரம், சாதாரண தரம் ஆகிய பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களே இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு வகுப்பு மாணவர்களும் கடந்த 3 மாத காலமாதமாக, தங்களது பாடசாலை வகுப்புகள், தனியார் வகுப்புகள் ஆகியவற்றுக்குச் செல்லாதமையால், கல்வி நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டுள்ளது என்றும் இதனால், இணையத்தளம் மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, தங்களிடம் இல்லாத இலத்திரனியல் உபகரணங்களைக் கொள்வனவு செய்ய முயலும்போதும், அவை அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓகஸ்ட், டிசெம்பர்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் இதனால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாணவர்களும் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .