2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இது ஆட்சிமாற்றத்துக்கான தேர்தலல்ல; “அபிவிருத்திக்கான தேர்தல்”

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது, ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலல்ல. எனவே மக்கள், இந்தத் தேர்தலில் தமது கிராமங்களை அபிவிருத்திச் செய்வதற்குத் தகுதியானவர்களை தெரிவுசெய்ய வேண்டும்” என்று, சப்ரகவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யெஹியா எம்.இப்ழார் கூறினார்.

இரத்தினபுரி குருவிட்ட பகுதியில், சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட தோட்ட வீதியை திறந்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“நாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே, கூடுதலான அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அது மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. மாறாக மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் திட்டமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“அதனால்தான், எமது நல்லாட்சியில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நல்லாட்சியில், மக்களின் பணத்தை கொள்ளையடிக்க முடியாது. கொள்ளையடிக்காத மற்றும் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே, வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

“ஐ.தே.க. எக்காலத்திலும் மக்களின் பணத்தை சூறையாடவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது எமது கட்சியாகும். அதனால் எம்மீது பல குற்றச்சாட்டுக்களை எதிர்க் கட்சியினர் கூறி வருகின்றனர். இதன் உண்மை நிலையை, மக்கள் அறிய வேண்டுமென்பதற்காகவே, சில ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னர், சப்ரகமுவ மாகாண சபையினூடாக, இரத்தினபுரி மாவட்டத்தில் 290 மில்லியன் ரூபாய்க்கு அபிவிருத்திச் செய்துள்ளேன்.

“எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு, இவ்வளவு தொகைப்பணத்தை, என்னால், அபிவிருத்திக்காக, செலவு செய்ய முடியுமாயின், ஆளும் கட்சியாக மாறினால் இதனைவிட கூடுதலான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே, எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர ஆவணஞ்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .