2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன முறுகல் ஏற்படுவதற்கு முன்பாக ’மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும்’

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

கண்டி மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு இடையே, இன முறுகல் ஏற்படுவதற்கு முன்பாக, மாநகர சபைக்கு, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாநகர சபையின் உறுப்பினர் எம்.பி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டி மாநகர சபையில், தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத காரணத்தால், தமிழ் உறுப்பினர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், பெரும்பான்மை உறுப்பினர்கள், தம்மை அவமரியாதையாகப் பார்க்கின்ற ஒருநிலை ஏற்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், எம்.பி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறிய அவர், கண்டி மாநகர சபையில் மாதாந்தக் கூட்டங்கள் நடைபெறுகின்ற போது, தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மொழியில் பேச முடியாத ஒருநிலை உள்ளது எனவும், கண்டி மாநகர சபையில் தமிழ் மொழியை, சிஙகள மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்வதற்கு உரியவர்கள் இன்மையே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, தமிழ் உறுப்பினர்கள், தங்களுக்குத் தெரிந்த சிங்கள மொழியில் உரையாற்றுகின்றனர் எனவும், இவ்வாறு உரையாற்றும்போது ஏற்படுகின்ற பிழைகளை, பெரும்பான்மை உறுப்பினர்கள் பெரிதுபடுத்தி, தம்மை அகௌரவப்படுத்துகின்றனர் எனவும், அவர் விமர்சித்தார்.

அத்தோடு, இதனை தான வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, கண்டி மாநகர சபைக்கு, உரிய மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இல்லாவிட்டால் தமிழ் உறுப்பினர்களுக்கும் பெரும்பான்மையின உறுப்பினர்களுக்கும் இடையில முறுகல் நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .