2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இன்று விடுமுறை இல்லை’

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

.கேதீஸ் 

“தைத்திருநாளின் மறுநாளான இன்றுத் திங்கட்கிழமை, விடுமுறை வழங்கப்படவில்லை” என, மத்திய மாகாண விவசாய, இந்துக் கலாசார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார். 

“2018ஆம் ஆண்டுக்கான, முதலாம் தரம் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வு தேசிய நிகழ்வாக இன்று (15) இடம்பெறவுள்ளது. ஆகையால், இன்றையதினம் விடுமுறை வழங்க முடியாதுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.  

இந்த விடுமுறை விவகாரம் தொடர்பில், அவர் மேலும் தெரிவித்ததாவது,  

“மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள், தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை கருத்திற்கொண்டும், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எதிர்வரும் காலங்களில் செயற்படவேண்டும். 

“தமிழர்களின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் பண்டிகைகள், விழாக்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்தால், அதற்கு அடுத்த நாள், மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும். இதுவே நடைமுறையில் இருந்தது. 

“ஆனால், முதலாம் தரம் மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் தேசிய நிகழ்வை, இன்று (15) நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக, மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு தைத்திருநாளின் மறுநாள் இன்றுத் திங்கட்கிழமை, விடுமுறை வழங்க முடியாதுள்ளது. 

“இந்தப் பிரச்சினைக்கு, எதிர்வரும் காலங்களில் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .