2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரத்தினக்கல் அகழ்வுக்கு நவீன தொழில்நுட்பம்?

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினக்கல் அகழ்வுக்கு, சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார். 

இரத்தினபுரி, எரபத்த பகுதியில், நேற்று (28) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  

இரத்தினபுரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாக, இரத்தினக்கல் அகழ்வு உள்ளது என்றும் ஆனால் அண்மைக்காலமாக, இரத்தினக்கல் அகழ்வைத் தமது ஜீவனோபாய தொழிலாகக் கொண்டுள்ள தொழிலாளர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன் பல அசெளகரியங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். 

இதனால் அவர்களால் தொடர்ந்தும் இரத்தினக்கல் அகழ்வை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவோர், மண்வெட்டி, கூடைகள் போன்ற உபகரணங்களையே இதற்குப் பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .