2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரத்தினபுரி மாநகர சபையின் மேயர் பதவிக்குப் போட்டி

சிவாணி ஸ்ரீ   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாநகர சபையின் மேயர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி மாநகர சபைக்கான மேயர் பதவியானது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, தமது வட்டாரத்தில் கூடுதலான சராசரி விகிதத்தில் வெற்றிபெற்றவருக்கே வழங்கப்பட வேண்டும் என்று, பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.

இதைக் கருத்திற் கொள்ளாத ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர், மேற்படி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வருகின்றனர் எனத் தெரியவருகிறது.
இரத்தினபுரி மாநகர சபைக்கு மேயர் ஒருவரைத் தெரிவுசெய்வதுத் தொடர்பாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி தேர்தல் தொகுதி அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் பண்டாரவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இரத்தினபுரி மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

இதில் மாநகர சபையின் மேயரைத் தெரிவுசெய்வது தொடர்பான விடயம் பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை இரத்தினபுரி மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து ஆதரவு வழங்கி வரும் இரத்தினபுரி மாநகர சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவருமான மொஹமட் சியாம், இரத்தினபுரி மாநகர சபையின் உப மேயராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என, இரத்தினபுரி சிறுபான்மை மக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X