2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இரத்தினபுரி வைத்தியசாலையில் நாளை முதல் கொவிட் 19 பரிசோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை,  இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில், நாளை (6) முதல் முன்னெடுக்கப்படும் என்று,  இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அநோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் அலுவகத்தில்,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், நேற்று (4) நடைபெற்ற  கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட கலந்தரையாலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பெற்று கொடுக்கப்பட்டுள்ள  PCR இயந்திரம்,  மேற்படி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களால், இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு, தற்காலிகமாக  வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி இயந்திரத்தின் மூலம் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சப்ரகமுவ பல்கலைகழக குழுவினர், மேற்படி வைத்தியசாலை தரப்பினருக்கு உதவும் முகமாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

அதனடிப்படையில், கொவிட் 19 தொடர்பாக  கொழும்பில் செய்யப்படும் பரிசோதனை, நாளை(6) முதல் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் என்று, இரத்தினபுரி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அநோஜ் ரொட்ரிகோ மேலும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மாகாண ஆளுநர், கொவிட் 19 தொடர்பாக பரிசோதனை செய்வதற்காக, கேகாலை மாட்ட வைத்தியசாலைக்கும் பரிசோதனை இயந்திரங்கள் விரைவில் பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X