2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

சிவாணி ஸ்ரீ   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்படைந்துள்ளதோடு, மண்சரிவு அபாயநிலையும் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி, எஹலியகொடை, குருவிட்ட, கிரியெல்ல, பலாங்கொடை, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும், மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தள்ளது.

மழையுடனான வானிலையால், தோட்டத்தொழிலாளர்களின் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக தோட்டப் பகுதிகளில் இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள்,  தோட்டப்புறங்களிலிருந்து நகர பகுதிகளுக்கு வரும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X