2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இருவேறு இடங்களில் தீ; குடியிருப்புகள் சேதம்

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா

அக்கரப்பத்தனை, ஹட்டன் ஆகிய பகுதிகளில், இன்று (28) இரவு ஏற்பட்ட இருவேறு தீவிபத்துகளால், குடியிருப்பொன்றும் வாடி வீடொன்றும் தீக்கிரையாகியுள்ளன என்று, பொலிஸார் தெரிவித்தனர். 

அக்கரப்பத்தனை அல்டோரி தோட்ட லயன் குடியிருப்பில், இன்று (29) காலை ஏற்பட்ட தீ விபத்தால், ஒரு குடியிருப்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த வீட்டின் பூஜையறையில் இருந்த விளக்கின் மூலமாகவே, தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

பிரதேச மக்கள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்றும் தீயினால், குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி உட்பட உடமைகள் பல தீயில் கருகியுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

தீ விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, ஹட்டன் - மல்லியப்பூ பகுதியில் அமைந்துள்ள பல வருடங்கள் பழைமை வாய்ந்த வாடி வீடு, தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.  

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியே,நேற்று(28) அதிகாலை 4.15 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.  

6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த விடுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்ததாகவும் இந்த விடுதி அவ்வப்போது வாடகைக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.  

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருள்கள், ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .