2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறப்பர் விலை வீழச்சியால் இறப்பர் தொழிற்றுறை பாதிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறப்பர் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், சிறிய மற்றும் பெரியளவிலான இறப்பர் தோட்ட உரிமையாளர்கள், பாரிய பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதுடன், இறப்பர் தொழிற்றுறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே, அதிகளவில் இறப்பர் தொழிற்றுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோகிராம் இறப்பரானது, 220 ரூபாயாகக் குறைவடைந்துள்ளதால், தொழிற்றுறையை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக, இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்பர் விலை வீழ்ச்சி காரணமாக பெரிய அளவிலான பெருந்தோட்ட நிறுவனங்கள், தொழிற்றுறைப் பராமரிப்பு மற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கையில் பல இறப்பர் தொழிற்சாலைகள் உள்ளபோதிலும், அவற்றுக்குத் தேவையான இறப்பர் பாலை, குறைந்த விலைக்கு வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதே, இந்நாட்டில் இறப்பர் தொழிற்றுறை வீழச்சியடைந்தமைக்குப் பிரதான காரணமென்று, இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறப்பர் விலை வீழச்சியடைய ஆரம்பித்ததாகவும், ஆட்சியிலிருந்த இரு அரசாங்கங்களும் இதற்கெதிராக எவ்விதத் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .