2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’இலகுவாக மின்சாரம் பெறலாம்’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

அரசாங்க மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதில், புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள கொள்கையின் அடிப்படையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தங்களது வீடுகளுக்கு மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, இனி யாரிடமும் அனுமதிப் பெறத் தேவையில்லை என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், தன்னுடைய அமைச்சுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எமது நரை சுத்தமாக வைத்திருப்போம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி அமைச்சினூடாக, குப்பை அகற்றும் இயந்திரமொன்றை, பஸ்சறை பிரதேச சபைக்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றம் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தங்களது வீடுகளுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்கும் சமூகமாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர் என்று கூறிய அவர், இனி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மின்சாரம் வழங்கமுடியாது என்று எவராலும் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்த நடைமுறை, தோட்டங்களுக்கும் தோட்டத்தை அண்மித்து வாழ்வோருக்கும் பொருத்தமானது என்றும் இது தொடர்பாக, மின்வலு எரிசக்தி, தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர் இருந்த சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் எனவே, பெருந்தோட்ட மக்கள், தங்கள் வீடுகளுக்குத் தேவையான மின்சார இணைப்பை பெற்றுக் கொள்ள, தங்கள் பிரதேசத்திலுள்ள மின்சார சபையைத் தொடர்பு கொண்டு,  மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்னும் இந்த நடைமுறை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில், தனது அமைச்சைத் தொடர்பு கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .