2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் நடமாடும் சேவை

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை, ஒன்று கொட்டகலை விநாயகர் ஆலய மண்டபத்தில், இன்று (23) நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மத்திய மாகாணப் பணிப்பாளர் கந்தசாமி கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிசாமி பீட்டர் போல், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நடமாடும் சேவையின் போது 200 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், வலது குறைந்தோருக்கு பிளாஸ்டிக் கை பிரம்பு, சக்கர நாட்காளிகள் என்பன வழங்கப்பட்டன.

மேலும், 13 பாடசாலைகளை சேர்ந்த தலா 10 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு, இரத்ததான முகாமும் இடம்பெற்றது. அத்தோடு கௌரவிப்பு நிகழ்வும், கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்கள், பத்தனை பொலிஸார், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .