2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’இலங்கை மாத்திரமே ச​ரிவைப் பற்றி பேசுகிறது’

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நதீக பண்டார​

பல நாடுகள், அவற்றை மேம்படுத்திய தலைவர்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இலங்கை மாத்திரம் சரிவைப் பற்றி பேச வேண்டிய அவல நிலையில் உள்ளதென, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்க சபையும் மோதிக்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி பலகொல்லவில், நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்த அவர்,
​மேற்படி நாட்டின் முக்கிய தரப்புகளுக்கு இடையிலான மோதல், நாட்டு மக்களை பெரிதும் பாதிப்பதாகவும் அதனால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியவர்கள் தமது தலைவர்களின் குறைபாடுகளை கேட்டுக்கொணடிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறிருக்க நாட்டின் பிரதான கட்சிகளுக்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களை களமிறக்குவது சவாலக அமைந்துள்ளபோதும் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் வரிசையில் உள்ளதாகவும் அவர்களில் சரியானவரை தெரிவு செய்து எதிர்வரும் அடுத்த மாதம் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள அக்கட்சி மாநாட்டில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .