2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் 43,714 சிறுவர் தொழிலாளர்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இலங்கையில், 43,714 சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர் எனச் சுட்டிக்காட்டியுள்ள இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலணி லொக்குபோதாகம, சப்ரகமுவ மாகாணத்தில் மட்டும், 2,179 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், சிறுவர் தொழிலாளர்கள் குறித்த தகவல்களைத் தாம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சிறுவர் தொழிலாளர்களற்ற மாகாணமாக சப்ரமுகவ மாகாண சபையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில், தனியார்துறை வர்த்தகர்கள், மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட தேயிலை, இறப்பர், தேங்காய் தோட்ட உரிமையாளர்கள் ஆகியோருக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .