2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்

Kogilavani   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தோட்ட மருத்துவ அதிகாரியிடம் 9 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, நுவரெலியா, கல்முனை தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் இருவரை, இம்மாதம் 10ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜெயசேகர, இன்று (31) காலை உத்தரவிட்டார்.

இதேவேளை, மேற்படி அதிகாரிகள் தொடர்பான வழக்கு விசாரணையை, கொழும்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யுமாறும், அதிகாரிகளுக்கு நீதவான் பணித்துள்ளார்.

நானுஓயா, எடின்பரோ தோட்டத்தில் சேவையாற்றி வந்த நிலையில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட தோட்ட வைத்தியர், தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக, நுவரெலியா தொழில் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தோட்ட வைத்தியருக்குச் சாட்சியாளர்களாக செயற்பாட்டு வந்து நுவரெலியா, கல்முனை தொழில் திணைக்கள அதிகாரிகள் இருவர், வைத்தியரிடம் 9,000ஆயிரம் ரூபாயை, இலஞ்சமாக பெற முயன்றுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவர்கள், இலஞ்ச பணத்தைப் பெற முயன்றபோது, கொழும்பிலிருந்து சென்ற, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால், கையுமெய்யமாக, நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

நுவரெலியா தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரி 1,000 ரூபாயையும், கல்முனை தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரி 8,000 ரூபாயையும் இலஞ்சமாகப் பெற முயன்றனர் என, மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மேற்படி அதிகாரிகளை, நுவரெலியா பொலிஸார், நேற்று (31) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால், தமது அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டமைக்கு, அரச சேவைகள் தொழில் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தொழிலாளர் நீதிமன்றத்தின் அனைத்து வழக்குகளிலிருந்து விலகுவதற்கும் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக, நேற்று  (30) இரவு முதல், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதென, சங்கத்தின் தலைவர் இரேஷ் சிந்தக கமகே தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .