2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இளம் முதலீட்டாளர்களை உருவாக்கும் திட்டம்

மொஹொமட் ஆஸிக்   / 2019 மார்ச் 25 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தால், இளம் முதலீட்டாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 

நாட்டிலுள்ள இளைஞர்களை இலக்காகக் கொண்டு, இத்திட்டம் நடைமுறைப்படுத்த
ப்படவுள்ளது என்றும் ஏற்றுமதி விவசாயத்திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஆர்.கே.டபிள்யூ. ரன்கெத்கும்புற தெரிவித்தார்.  இந்தத் திட்டம், கண்டியிலுள்ள ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் மாவட்டக் காரியாலயத்தில், எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  

இலங்கையின் பெருந்தோட்டங்களில் உற்பத்தியாகும் ஏற்றுமதி விவசாயப் பொருள்கள் அல்லது உப உணவு வாசனைப் பொருள்கள் தொடர்பாக, சம்பிரதாயமாக மேற்கொள்ளப்பட்டுவரும் முறைகளை மட்டுமே பின்பற்றப்படுவதாகவும் புதிய யுக்திகளை  பின்பற்றுவது குறைவாகக் காணப்படுவதாகவும் எனவே, இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில், மேற்படிச் செயலமர்வு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும், அதிகரித்த கேள்வியுள்ள போதிலும், விவசாயத்துறையிலுள்ள கள உத்தியோகத்தர்களுக்கு, அவை பற்றிய போதிய விளக்கம் இன்மையால், அவற்றை உற்பத்தி செய்வதில், விவசாயிகளை ஊக்குவிப்பது குறைவாக உள்ளமையாலேயே, இது தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது எனக் கூறினார்.  

கருவா, மிளகு, சாதிக்காய், கொக்கோ, இஞ்சி, மஞ்சள், கோப்பி, மிளகு, வெனிலா, கராம்பு, ஏலம் போன்றவை இதில் அடங்குகின்றன. இவற்றை உற்பத்திச் செய்தல், பேணுதல், நோய்த்தடுப்பு போன்ற பல விடயங்கள் பற்றி இச் செயலமர்வில் தெரிவிக்கப்படவுள்ளது. இது தொடர்புடைய மேலதிகத் தகவல்களை, 081-2388392 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X