2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இளைஞர், யுவதிகளுக்கு சட்டப் பயிற்சி வழங்க ஏற்பாடு’

ஆ.ரமேஸ்   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட பெருந்தோட்டப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில், இளைஞர், யுவதிகளுக்கு, சட்டங்கள் தொடர்பான பயிற்சிகளை சட்டத்தரணிகளூடாக வழங்கவுள்ளதாக, நுவரெலியா மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜன் தெரிவித்தார்.

மாதம் ஒருமுறை, தேர்வு செய்யப்படும் கிராமம் அல்லது தோட்டப்பகுதிக்கு நேரடியாகச் சென்று சட்ட ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கத் தயாராகியுள்ளதாகவும் அவர் கூறினார். நுவரெலியாவில் அமைந்துள்ள அவருடைய அலுவலகத்தில், இது தொடர்பாக, அவர் நேற்று (29) அறிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உழைப்புக்கென்றே தம்கையும் முறையாகத் தெரிந்துகொண்டு, அதனைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளுக்காகவே பயிற்சிகளும் ஒழுங்கு விதிகளையும் வழங்க சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்றுடன் செயலாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

படித்த இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவ, மணவிகளூடாக, பெற்றோர்களைச் சென்றடையும் வகையில், இந்தச் சட்டவிதிகள், ஒழுங்குகள், நீதிமன்ற நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பிலான பயிற்சிகள் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .