2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உக்குவளைப் பிரதேச சபையில் அமளிதுமளி

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

உக்குவளைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவருமான சமந்த தர்மசேனவால் விடுத்தக் கோரிக்கைக்கமைய சபையின் உறுப்பினர்கள் கலந்துரையாடுவதற்காக சபையின் கேட்போர் கூடத்தை வழங்கியமைத் தொடர்பில், நேற்று (15) சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

சபையின்  தவிசாளர் சைத்திய திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற மாதாந்த சபை அமர்வுகளின் போதே, இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சபைக்குள் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அதில் சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட வெளியாள்களும் கலந்துகொள்வதாகவும் இவ்வாறான அரசியல் காரணங்களைக் கதைப்பதற்கு சபையை வழங்குவது எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான, அய்.எம். பாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சமந்த தர்மசேன, தான் சபையின் தவிசாளர், செயலாளரின் உரிய அனுமதியைப் பெற்றே கூட்டத்தை நடத்தியதாகவும் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்களே  இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதாகவும் தெரிவித்தப் போது, சமந்த தர்மசேனவுக்கும், பிரதேச சபை உறுப்பினரான, பாரிஸூக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து குறுக்கிட்ட சபையின் உப தவிசாளர் ஏ.ஜே. நிஸார்  இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்றும் சபை  அமர்வுகள் இடம்பெறத தினங்களில் சபையை பூட்டுவதாகவும் உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .