2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

Kogilavani   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

நாவலப்பிட்டிய, கினிகத்தேனை, ஹட்டன் உள்ளிட்ட நகரங்களிலுள்ள வியாபார நிலையங்களில் உணவுப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுச் செல்வதால், தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பண்டிகைக் காலம் என்பதால், அதிக விலைக்கே அரிசி, முட்டை, சீனி, பருப்பு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சில வியாபார நிலையங்களில், தேங்காய் 95 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால், தேங்காயை  கொள்வனவு செய்வதை இடைநிறுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கம்பளை, நாவலப்பிட்டிய போன்ற நகரங்களில், தேங்காய் ஒன்று 160 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுவதாகவும்  இதனால் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை,  இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்று, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .