2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’உமா ஓயா’ இழப்பீடுக் கோரும் வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 மே 01 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பதுளை மேல் நீதிமன்றத்தினால், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உமாஓயா திட்டத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினால் உரிய இழப்பீடு  வழங்கப்படவில்லை எனவும், இழப்பீட்டு நிதியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்டு இந்த வழக்குத் தாக்கதல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை மேல்நீதிமன்றத்தில் நீதிபதி துசித்த தேசப்பிரிய குணசேகர முன்னிலையில் நேற்றைய தினம் (01)  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக, உமா ஓயா திட்டபணிப்பாளர் பி.பி.அமரசேக்கர,  பதுளை மாவட்ட அரசாங்க அதிபர்  நிமால் அபயசிரி, சுற்றுச் சூழல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, ஊவா மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.பி.எம்.விஜயதுங்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னணி சார்பில் ஊவா மாகாண சபையின், ஜே.வி.பி உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண, முன்னணியின் தலைவர் எய்ச்.ஏ.போதிபால, செயலாளர் வசந்த சன்ஜீவ சோமசிரி ஆகியோரினால் இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .