2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’உமாஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம் நியாயமானது’

Kogilavani   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

'உமாஓயா திட்ட போராட்டம் நியாயமானது. நானும் அந்த மக்கள் பக்கமே"  என. இந்த உமா ஓயா திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹட்டன் ஹைலன்ட்  கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது அங்கு உரையாற்றி வருகின்றார்.  அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அத்தோடு, பொறியியலாளர்களின் கருத்தை மீறி அரசியல் பலத்தால் ஆர்ம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டத்தால், பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நான் ஆட்சிபீடம் ஏறியவுடன் அந்த வேலைத்திட்டத்தை நிறுத்த முயற்சித்தேன். எனினும் அக்காலப்பகுதியில்,  வேலைத்திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி வேலைகள் நிறைவடைந்துவிட்டதால், அவ்வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது அங்கு நிலவும் பிரச்சிளைக்கு  தீர்வு காணும் வகையில் நோர்வே நாட்டு பொறியியலாளர்களை அனுப்பி வைக்குமாறு, அந் நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளேன். நோர்வே நாட்டு பொறியிலாளர்கள்,  இன்னும் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர்" என்றார்.

தமிழ்மொழி பிரிவில் நிலவி வரும் ஆசிரியர்பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காண்பேன். ஹைலன்ட் கல்லூரின் 125 வது ஆண்டு விழைவை கொண்டாடுவதை போல எதிர்காலத்தில் 125 ஆண்டை முன்னெடுக்க வேண்டியது சவால்மிக்கது. தொழில்நுடப உலகத்தோடு முன்னோக்கி செல்ல வேண்டிய காலகட்டம் சவால்மிக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .