2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’உயிர்த்த ஞாயிறு தக்குதல்களை தவிர்த்திருக்கலாம்’

Editorial   / 2019 மே 12 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

 

மட்டக்களப்பு வவுணதீவில், இரு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, உரிய முறையில் விசாரித்திருந்தால், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்த விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், எந்தக் குற்றமும் செய்யாத அஜந்தன் என்று சொல்லப்படுகின்ற கதிர்காமத்தம்பி ராஜகுமாரனை, கைது செய்திருக்க வேண்டியத் தேவை ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.

கந்தப்பளை கொங்கோடியா நடுப்பிரிவு கீழ்ப்பிரிவு பகுதிக்கான பிரதான பாதை, பல இலட்சம் ரூபாய் செலவில் செப்பனிடப்படவுள்ளது.

3 கிலோமீற்றர் தூரமுடைய இந்தப் பாதை, முதற்கட்டமாக 19 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள்,  இன்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  நாட்டில் இன்று அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்தவில்லை என்றும் அபிவிருத்திகளை இடைநிறுத்தினால், பயங்கரவாதிகள் கண்ட கனவு நனவாகிவிடும் என்பதால், அரசங்கம் அபிவிருத்திகளை தடையின்றி முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

வவுணத்தீவு படுகொலையை பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் உரிய முறையில் விசாரித்து தகவல்களைத் திரட்டியிருந்தால்  உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்ததுடன், எனவே இந்த விடயத்தில், அரசாங்கமும் பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்பது புலனாகிறது என்றும் தெரிவித்தார்.

உரிய விசாரணைகளை முன்னெடுக்காததால், பயங்கரவாதிகள் தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள் என்று சாடியதுடன், இனிமேலாவது அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்துச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .